நடத்தை விதி மீறல் - ரிஷப் பண்டுக்கு பெருந்தொகை அபராதம் விதிப்பு
5 சித்திரை 2024 வெள்ளி 08:56 | பார்வைகள் : 1647
கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் பந்துவீச்சுக்கு அதிக நேரமெடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டு டெல்லி அணியின் ரிஷப் பண்டுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் 16வது ஆட்டத்திலேயே ரிஷப் பண்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரூ 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், டெல்லி அணியின் எஞ்சிய வீரர்களுக்கு ரூ 6 லட்சம் அல்லது மொத்த ஆட்டத்திற்கான கட்டணத்தில் 25 சதவீதம், இதில் எது குறைவாக உள்ளதோ அதை செலுத்தவும் பிசிசிஐ கோரியுள்ளது.
ரிஷப் பண்டுக்கு இது இரண்டாவது முறையாக இந்த தொடரில் அபராதம் விதிக்கின்றனர்.
அதுவும் ஒரே காரணத்திற்காக. ஏற்கனவே சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ரூ 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணிக்கு எதிராக 32 பந்துகளில் 51 ஓட்டங்கள் குவித்திருந்தார் ரிஷப் பண்ட்.
இதனால் டெல்லி அணி 191 ஓட்டங்கள் சேர்த்ததுடன், சென்னைக்கு எதிராக வெற்றியும் பதிவு செய்தது.