IPL-ல் அதிக தோல்விகளைச் சந்தித்த முதல் 5 கேப்டன்கள்., முதலிடத்தில் யார்?
5 சித்திரை 2024 வெள்ளி 09:04 | பார்வைகள் : 1622
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் ஷர்மா கேப்டன்களாக வெற்றி பெற்றவர்களாக பார்க்கப்படுகின்றனர்.
ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதிகபட்சமாக தலா 5 முறை IPL சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளன.
ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் தோல்வியடைந்தவர்கள் பட்டியலிலும் இவ்விருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த ஐபிஎல் கேப்டன்களின் பட்டியல் இதோ. அவர்கள் இழந்த போட்டிகளின் எண்ணிக்கையைக் கவனியுங்கள். முதலிடத்தைப் பிடித்துள்ளவர் உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்.
5. டேவிட் வார்னர் (David Warner)
ஐபிஎல் வரலாற்றில் அதிக தோல்விகளுடன் ஐபிஎல் கேப்டன்களில் ஐந்தாவது இடத்தில் டேவிட் வார்னர் உள்ளார்.
83 போட்டிகளில் IPL அணிகளை வழிநடத்தியுள்ளார், அவற்றில் 41 போட்டிகளில் தோல்வியை சந்தித்தார்.
4. கௌதம் கம்பீர் (Gautam Gambir)
இந்த பட்டியலில் 4வது இடத்தில் கவுதம் கம்பீர் உள்ளார். கம்பீர் 129 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் Delhi DareDevils (இப்போது Delhi Capitals) ஆகிய அணிகளை வழி நடத்தியபோது 57 போட்டிகளில் தோல்வியை சந்தித்தார்.
3. ரோஹித் சர்மா (Rohit Sharma)
பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரோஹித் சர்மா, 158 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்து, அதில் 67 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி அவரது தலைமையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
2. விராட் கோலி (Virat Kohli)
பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள விராட் கோலி, 143 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்து 70 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் முக்கிய நபரான விராட் கோலி, ஐபிஎல் தொடரில் தனது கேப்டன் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
1. எம்எஸ் தோனி (MS Dhoni)
ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டனாக அறியப்பட்ட எம்எஸ் தோனி, அவரது தலைமையில் CSK அணி ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றவர் எம்எஸ் தோனி.
இருந்தபோதிலும், கேப்டனாக 226 போட்டிகளில் 91 தோல்விகளுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
தற்போது நடந்துவரும் IPL சீசனில் அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது CSKவின் கேப்டனாக ருதுராஜ் கைக்கவாட் தலைமை தங்குகிறார்.