Paristamil Navigation Paristamil advert login

AC மின்கட்டணம் குறைவாக வர எத்தனை Ton பயன்படுத்த வேண்டும்..?

 AC மின்கட்டணம் குறைவாக வர எத்தனை Ton பயன்படுத்த வேண்டும்..?

5 சித்திரை 2024 வெள்ளி 09:25 | பார்வைகள் : 1407


AC மின்கட்டணம் குறைவாக வருவதற்கு எந்த மாதிரியான விடயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் கோடை காலம் போலவே வெயில் வெளுத்து வாங்குகிறது.

கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.

ஆனால், நீண்ட நேரம் AC ஓடினால் மின்கட்டணமும் தலைசுற்றும் அளவுக்கு வந்துவிடும். அதை எப்படி குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

நாம் AC வங்கும்போது சில விடயங்களை நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பலமுறை நம்மால் AC வாங்க முடியாது. எங்கு ஏசி வாங்குவது, எத்தனை ஸ்டார் வேண்டும், எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும் என்ற கேள்வி பலரது மனதில் இருக்கும்.

டொமஸ்டிக் மின்சார லைனில் (domestic electricity line) AC -க்கு preload இருக்காது. அதனால், நாம் மின்வாரிய அலுவலகத்தில் preload நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, அங்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை Deposit செய்ய வேண்டும்.

ஆனால், தற்போதைய காலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் AC Load கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது நீங்கள் எலக்ட்ரீஷியனிடம் கேட்டு முடிவு எடுங்கள்.

அடுத்ததாக AC -யை நிறுவும் முன்பு earthing சரியாக இருக்கிறதா என்பதையும், Ventilator இருந்தால் அதை நிறுவியுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். ஜன்னல், மற்றும் கதவுகளின் இடையில் இடைவெளிகள் இல்லாமல் இருந்தால் மின்கட்டணம் குறைவாக இருக்கும்.

உங்களது அறையானது 150 சதுர அடி அல்லது அதற்கு மேல் இருந்தால் 1.5 டன் ஏசி (1.5 Ton AC) நிறுவுவது நல்லது. பொதுவாகவே 1.5 Ton AC 120 சதுர அடி வரை செல்லும். அப்போது, அறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3 ஆக இருக்க வேண்டும்.

தற்போது, Automatic AC வந்துள்ளதால் மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. 1.5 Ton AC விரைவில் குளிர்ச்சி அடைவதால் மின்சார கட்டணமும் குறைவாக வரும்.

3 Star மற்றும் 5 Star AC -யின் விலை வித்தியாசம் பெரியது. ஆனால் 5 Star AC -யின் மின்கட்டணம் 3 Star AC -யை விட குறைவு.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்