தாய்ப்பால் தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பெண்....
16 ஆடி 2023 ஞாயிறு 09:22 | பார்வைகள் : 7754
அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள அலோஹா பகுதியை சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன்-சியரா(Elisabeth Anderson-Sierra) என்ற தாய் ஒருவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தன் தாய்ப்பால் மூலம் ஊட்டம் வழங்கி வருகிறார்.
அத்துடன் குறைமாத குழந்தைகள் பலருக்கு தன்னுடைய தாய்ப்பாலை தானமாக வழங்கி உதவி வருகிறது.
எலிசபெத் ஆண்டர்சன்-சியரா தாய்ப்பால்(breastmilk) வங்கிக்கு 20 பெப்ரவரி 2015 முதல் 20 ஜூன் 2018 வரையிலான காலத்திற்குள் 1.599.68 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார்.
இது தனிநபர் ஒருவரால் வழங்கப்பட்ட மிகப்பெரிய தாய்ப்பால் கொடையாகும்.
இந்த சாதனைக்காக எலிசபெத்திற்கு கின்னஸ் சாதனையாளர் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 வருடங்களில் எலிசபெத், உள்ளூர் குடும்பங்கள் மற்றும் உலக அளவிலான பெறுநர்கள் என பலருக்கு இதுவரை 350,000 அவுன்ஸ்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார்.
மேலும் தாய்ப்பால் வங்கிக்கு 2015ம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தான் வழங்கிய தாய்ப்பால் அளவு மட்டுமே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என எலிசபெத் குறிப்பிட்டுள்ளார்.
பால் சுரக்காதவர்கள் என அடையாளம் சூட்டப்பட்ட பல பெறுநர்களுக்கு எலிசபெத் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார்.
இவ்வாறு அடையாளம் சூட்டப்பட்ட பல்வேறு பெறுநர்களின் கதைகளில் மாற்றம் ஏற்படுத்துவதே என்னுடைய எல்லாம் ஆன எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.
எலிசபெத் ஆண்டர்சன்-சியரா ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம்(hyperlactation syndrome) என்ற பாதிப்பு உள்ளது.
இந்த பாதிப்பு காரணமாக அவருக்கு பால் உற்பத்தி அதிகரித்து தாய்ப்பால் வழிதல் ஏற்படும்.
இது தொடர்பாக எலிசபெத் பேசிய போது, என்னுடைய உடல் அதிகப்படியான ப்ரோலாக்டின் என்னும் ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்யும், இதுவே என்னுடைய அதிகமான தாய்ப்பால் சுரக்க செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்க உதவும் இயந்திரமும் என்னுடைய இந்த பணியில் முக்கிய பங்கு வகித்ததாக எலிசபெத் தெரிவித்துள்ளார்.