யாழில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

13 ஆவணி 2023 ஞாயிறு 02:31 | பார்வைகள் : 9985
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர், நிர்வாணமாக அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்வியங்காடு விளையாட்டரங்கு வீதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை மகேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி வெள்ளிக்கிழமை திருமணச் சடங்கிற்கு சென்றவேளை குடும்பஸ்தர் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார்.
அந்நிலையில் நேற்றைய தினம் காலை உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்ற போது, குடும்பஸ்தர் சடலமாக காணப்பட்டதை அவதானித்து, சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதுடன், சடலம் நிர்வாணமாகவும் காணப்படுவதால் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்த யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1