காஸாவிற்கு உதவிப்பொருட்கள் விநியோகங்களை தற்காலிகமாக இஸ்ரேல் அனுமதி

5 சித்திரை 2024 வெள்ளி 10:22 | பார்வைகள் : 7135
இஸ்ரேல் காசா பிரதேசத்தின் மீது தாக்குதலை நடத்த தொடங்கியதில் இருந்து அப்பிரதேசத்துக்கு உதவி பொருட்கள் வழங்குவது முற்றாக தடைப்பட்டு இருந்தது.
தனது எல்லைகளுக்கு ஊடாக காஸாவுக்கு உதவிப்பொருட்கள் விநியோகத்தை தற்காலிகமாக இஸ்ரேல் அனுமதிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, காஸாவின் வடபகுதியிலுள்ள எரீஸ் கடவையை ஒக்டோபர் 7 ஆம் திகதியின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேல் திறக்கவுள்ளது.
அத்துடன், காஸாவின் வடபகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இஸ்ரேலிய நகரான அஷ்தோத்திலுள்ள துறைமுகத்துக்கு ஊடாக விநியோகங்களை மேற்கொள்ளவும் இஸ்ரேல் அனுமதித்துள்ளதாகவும், ஜோர்தானிலிருந்து வரும் உதவிகளை அதிகரிப்பதற்கு அனுமதித்துள்ளதாகவும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஸா விடயத்தில் தனது கொள்கையில் கடும் மாற்றம் ஏற்படலாம் என அமெரிக்க எச்சரித்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025