ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிராக இரஷ்யா நூதன பிரச்சாரம்!
5 சித்திரை 2024 வெள்ளி 11:45 | பார்வைகள் : 4496
பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிராக இரஷ்யா நூதன பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.
தலைநகர் பரிசில் மூட்டைப் பூச்சிகளும், எலித்தொல்லைகளும் நிறைந்திருப்பதாகவும், அங்கு செல்வது ஆபத்தானது எனும் பிரச்சாரங்களை இரஷ்யா முன்னெடுத்துள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்கள் ஊடாக பரப்பி வருகிறதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இரஷ்யா பிரான்சுக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதங்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டுவருவது தொடர்பில் கடந்த பல மாதங்களாக செய்திகள் வெளியிட்டு வந்திருந்தோம்.,
இரஷ்ய மக்களிடம் ‘பிரான்ஸ் இரஷ்யா மீது அணுகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்போகிறது’ என்றெல்லாம் கதைகளை பரப்பியிருந்தது. இந்நிலையில், தற்போது ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிராக திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.
முன்னதாக, மொஸ்கோவில் இடம்பெற்ற 144 பேர் கொல்லப்பட்டமைக்கு காரணமாக அமைந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னார் பிரான்ஸ் இருப்பதாகவும் கதைகட்டி விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.