சென் நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு!
5 சித்திரை 2024 வெள்ளி 13:11 | பார்வைகள் : 4184
சென் நதியின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் 5 வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 3.87 மீற்றர் உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்து வருவதாகவும், அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனவும், குறிப்பாக நாளை, சனிக்கிழமை காலை இந்த நீர்மட்டம் 4.30 மீற்றர் உயரத்தை தொட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய பிரான்சின் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக சென் நதியின் நீர்மட்டம் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த வாரத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வுகளுக்கான பயிற்சிகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.