Paristamil Navigation Paristamil advert login

ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்..

ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்..

5 சித்திரை 2024 வெள்ளி 13:16 | பார்வைகள் : 5312


தமிழ் திரைப்படங்களில் அவ்வப்போது கிரிக்கெட் வீரர்கள் தலைகாட்டி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளது வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ’டியர்’ என்ற திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் ’ரிபெல்’ மற்றும் ’கள்வன்’ ஆகிய இரண்டு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் ’டியர்’ திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் இந்த ட்ரெய்லரை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் வெளியிடப் போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ட்ரெய்லரில் இருக்கும் வாய்ஸ் ஓவர் கூட அஸ்வின் குரல் தான் என்றும் கூறப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த ட்ரைலருக்காக மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்