Viry-Châtillon : தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் - சிகிச்சை பலனின்றி பலி!

5 சித்திரை 2024 வெள்ளி 15:45 | பார்வைகள் : 9354
குழு மோதலில் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயதுடைய சிறுவன், சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் பலியாகியுள்ளார்.
ஏப்ரல் 4 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணி அளவில், பாடசாலையை விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவரை பல்வேறு நபர்கள் இணைந்து தாக்கியிருந்தனர். படுகாயமடைந்த சிறுவன் பரிசில் உள்ள Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இன்று வெள்ளிக்கிழமை காலை சத்திரசிகிச்சை ஒன்று இடம்பெற்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சற்று முன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சிறுவனை மூன்று அல்லது நான்கு நபர்கள் இணைந்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1