Paristamil Navigation Paristamil advert login

கோப்பிவிதைகள் விலை தொடர்ந்து அதிகரிப்பு!

கோப்பிவிதைகள் விலை தொடர்ந்து அதிகரிப்பு!

5 சித்திரை 2024 வெள்ளி 16:21 | பார்வைகள் : 3281


பிரான்சில் கோப்பிவிதைகளின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த பதினைந்து ஆண்டுகளில் பிரான்ஸ் சந்தித்திராக விலை அதிகரிப்பை இவ்வாண்டு சந்தித்துள்ளது.

பிரான்சில் ஒரு தொன் கோப்பிவிதைகளின் விலை €3,600 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 2008 ஆம் ஆண்டின் பின்னர் இதுபோன்ற உச்சக்கட்ட விலையினை பிரான்ஸ் சந்தித்துள்ளது. இதனால் பிரான்சில் café மற்றும் அது சார்ந்த பொருட்கள் விலை அதிகரிப்பை சந்தித்துள்ளன.

மழை வீழ்ச்சி குறைந்துள்ளதால் கோப்பிவிதைகள் விளைவிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், உலக அளவில் இந்த விலை அதிகரிப்பும், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சந்தைகள் குறிப்பிட்டுள்ளன. 

குறிப்பாக வியட்நாமில் இருந்து அதிகளவு கோப்பிவிதைகள் பிரான்சுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த இறக்குமதி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதகவும், உலக சந்தைகளில் கோப்பிவிதைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்