Saint-Denis : பதின்மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை!

5 சித்திரை 2024 வெள்ளி 18:15 | பார்வைகள் : 12241
11 வயதுடைய சிறுமி ஒருவர் 13 ஆவது தளத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் ஏப்ரல் 4, நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. Cité de la Courtille கட்டிடத்தொகுதியில் வசிக்கும் இஸ்லாமிய தம்பதியினரின் 11 வயது மகளே தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர்கள், ரமழான் நோன்புக்காக அதிகாலை 5 மணிக்கு அவர்கள் மகளை அழைக்கச் சென்றிருந்த போது, அவரது அறையில் மகள் இருக்கவில்லை.
பின்னர் அறையின் ஜன்னல் திறந்திருப்பதைக் கவனித்த தந்தை, வெளியே எட்டிப் பார்த்தபோது, மகள் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்டு, இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்துள்ளார்.
உடனடியாக மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டபோதும், சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் Saint-Denis நகர காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1