Paristamil Navigation Paristamil advert login

€49 யூரோக்களுக்கு நாடு முழுக்க பயணிக்க மாதாந்த பயணச்சிட்டை! (முழுமையான விபரங்கள்)

€49 யூரோக்களுக்கு நாடு முழுக்க பயணிக்க மாதாந்த பயணச்சிட்டை! (முழுமையான விபரங்கள்)

5 சித்திரை 2024 வெள்ளி 18:39 | பார்வைகள் : 13330


€49 யூரோக்கள் கட்டணத்தில் ஒரு மாதம் முழுவதும் பயணிக்கக்கூடிய ஒரு சலுகை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஒரு மாதம் முழுவதும் எத்தனை தடவை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க முடியும்.

பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த சலுகை பயணச் சிட்டைகளை பிரெஞ்சு போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.

 

1. 27 வயதுக்கு குறைந்தவர்கள் மட்டுமே இந்த பயணச் சிட்டையை பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.

2. TER மற்றும் Intercity தொடருந்துகளில் மட்டுமே பயணிக்க முடியும். இல் து பிரான்சுக்குள் பயணிக்க நவிகோ அல்லது தனி பயணச்சிட்டைகள் அவசியமானதாகும். TGV, RER, மெற்றோ, ட்ராமில் எல்லாம் அது செல்லுபடியாகாது.

3. ஒரு பயண அட்டை 30 நாட்கள் பயன்படுத்த முடியும். எத்தனை பயணங்களையும் மேற்கொள்ள முடியும்.

4. வரும் ஜூன் மாதம் இந்த சிட்டைகள் விற்பனைகு வர உள்ளன.

பிரான்சில் மொத்தமாக 700,000 பேர் இந்த பயணச் சிட்டையினால் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்