Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் அறிக்கை அல்ல, உறுதிமொழி பத்திரமே கொடுக்கிறோம்: மோடி

தேர்தல் அறிக்கை அல்ல, உறுதிமொழி பத்திரமே கொடுக்கிறோம்: மோடி

6 சித்திரை 2024 சனி 02:11 | பார்வைகள் : 1807


பிற கட்சிகளைப் போல வெறும் தேர்தல் அறிக்கைகளை பா.ஜ வெளியிடுவதில்லை. நாங்கள் மக்களுக்கு உறுதிமொழி பத்திரம் கொடுத்து வருகிறோம்" என, பிரதமர் மோடி பேசினார்.

லோக்சபா தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்.19ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதமர் மோடி அங்குள்ள சுரு நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா வேகமாக முன்னேறி வருவதைக் கண்டு உலக நாடுகள் ஆச்சர்யப்படுகின்றன. இந்த மண் வித்தியாசமானது என அவர்களுக்குத் தெரியாது. நம்மால் எதையும் நிறைவேற்றிக் காட்ட முடியும். கடந்த 10 ஆண்டுகளில் நாடு மாறிக் கொண்டிருக்கிறது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நாடு இருந்த நிலை என்ன. மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சி நாட்டையே கொள்ளையடித்தது. இதனால் நமது பொருளாதாரம் சீரழிந்தது. நாட்டின் நற்பெயரும் உலகளவில் சரிந்தது.

அப்படியொரு சூழலில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. கொரோனா போன்ற ஒரு பெரிய நெருக்கடி வந்தது. அதையெல்லாம் சமாளித்து நாட்டை உலகின் 5வது மிகப் பெரிய பொருளாதாரமாக மாற்றிக் காட்டினோம்.

நாம் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றால், முதலில் பசியைத் தூண்டும் உணவுகளை கொடுப்பார்கள். நான் இதுவரை கொடுத்தது பசியை தூண்டும் உணவுகள் தான். வரும் ஆண்டுகளில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். நிச்சயமாக செய்வோம்.

பிற கட்சிகளைப் போல வெறும் தேர்தல் அறிக்கைகளை பா.ஜ வெளியிடுவதில்லை. நாங்கள் மக்களுக்கு உறுதிமொழி பத்திரம் கொடுத்து வருகிறோம். 2019ல் கொடுத்த உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றினோம்.

முத்தலாக் தடைச் சட்டம் என்பது, இஸ்லாமிய சகோதரிகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறது. மோடி ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பத்தையும் பாதுகாத்திருக்கிறார்.

இதே கரு நகரில் நான் 2019ம் ஆண்டு வந்தபோது பால்கோட்டில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அன்று பயங்கரவாதிகளுக்கு நாம் பாடத்தைக் கற்பித்தோம்.

இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியபோது, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதாரத்தைக் கேட்டார்கள். நாட்டையும் ராணுவத்தையும் அவமதிப்பதுதான் காங்கிரசின் அடையாளம்.

இவ்வாறு மோடி பேசினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்