Paristamil Navigation Paristamil advert login

காரில் AC போட்டவுடன் விரைவில் Cooling ஆக வேண்டுமா..? 

காரில் AC போட்டவுடன் விரைவில் Cooling ஆக வேண்டுமா..? 

6 சித்திரை 2024 சனி 08:13 | பார்வைகள் : 1753


காரில் ஏசி போட்டவுடன் விரைவில் குளிர்ச்சியாவதற்கு இந்த மாதிரியான விடயங்களை பின்பற்றினாலே போதும்.

இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் கோடை காலம் போலவே வெயில் வெளுத்து வாங்குகிறது.

இந்த சூழ்நிலையில் காரில் பயணம் செய்பவர்கள் நிச்சயமாக ஏசியை போட்டு தான் பயணம் செய்வார்கள்.

அதே போல, வெளிக்காற்றும் அனலாக இருக்கும் என்பதால் காரின் ஜன்னலை திறந்து வைக்க முடியாதபடி இருக்கும். இதனால், அவர்கள் காரின் ஜன்னலை மூடடி வைத்து ஏசியை ஆன் செய்து வைத்து பயணிப்பார்கள்.

தற்போது கோடை காலம் வந்துவிட்டதால் உங்களது காரில் இருக்கும் AC செயல்படுகிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் காரில் செல்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

இப்போது நாம் காரில் ஏசி போட்டவுடன் விரைவில் குளிர்ச்சியாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

* உங்களது காரை எப்பவும் நிழல் இருக்கும் இடத்தில் நிறுத்துங்கள். சூரிய ஒளி இருக்கும் இடத்தில் உங்களது காரை நிறுத்தினால் கேபினில் அளவுக்கதிமாக வெப்பம் இருக்கும்.

* உங்களது காரை நிறுத்தும்போது ஜன்னல் கதவுகளை முழுமையாக மூடாமல் திறந்து வையுங்கள். அதாவது, காருக்குள் காற்று சென்று வரும் வகையில் வழி ஏற்படுத்தி வையுங்கள்.


* எடுத்த உடனேயே ஏசியை முழு full blower mode- ல் வைக்காமல் படிப்படியாக காற்று வரும் வேகத்தை கூட்டுங்கள்.

* காரில் இருக்கும் AC Filter -யை சுத்தப்படுத்துங்கள். வேண்டுமானால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.


* உங்களது ஏசி சரியாக இயங்குவதற்கு நீங்கள்ரெகுலராக அதனை பயன்படுத்த வேண்டும். சிறிய தொலைவிற்கு சென்றால் கூட பயன்படுத்த வேண்டும்.

* மேற்கூறிய வழிமுறைகளை பயன்படுத்தியும் ஏசி கூலிங் ஆகவில்லை என்றால் சர்வீஸ் செய்வது நல்லது.    

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்