Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : மரத்துடன் மோதிய பேருந்து! - 12 பேர் காயம்!

பரிஸ் : மரத்துடன் மோதிய பேருந்து! - 12 பேர் காயம்!

6 சித்திரை 2024 சனி 11:35 | பார்வைகள் : 4445


பயணிகள் பேருந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது.

12 ஆம் வட்டாரத்தில் உள்ள RED D நிலையத்துக்கு பயணிக்கும் பேருந்து ஒன்று நள்ளிரவு 1.20 மணி அளவில் Bercy quay பகுதியில் விபத்துக்குள்ளானது. சாரதி உறங்கியதை அடுத்து, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு வெளியேறு மரத்தில் மோதுண்டது.

இதில் பேருந்தில் பயணித்த 12 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

 

விபத்துக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்