வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்காக நிர்மானிக்கப்படும் வீடுகள்
13 ஆவணி 2023 ஞாயிறு 09:30 | பார்வைகள் : 4955
வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளன.
சொந்த நிலத்தில் வீடு அமைத்தல் சொந்த காணிகள் இல்லாத வெளிநாட்டு பணியாளர்களுக்கு நகரப்பகுதிக்கு வெளியே தாம் விரும்பிய இடத்தில் வீடுகளை அமைத்து கொடுத்தல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்தல் போன்ற மூன்று முறைகளில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு தேவை உடைய வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களிடையே முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் சுமார் ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.