கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்ட நபர்! - மகளின் 15 வயதுக் காதலன் கைது!!

6 சித்திரை 2024 சனி 15:33 | பார்வைகள் : 8108
கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டு 50 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவரது மகளின் 15 வயதுக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஏப்ரல் 5, வெள்ளிக்கிழமை மாலை Toulouse (Haute-Garonne) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள square Alphonse-Delpech எனும் பகுதியில் வசிக்கும் நபரே கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அதன்போது அதில் தலையிட்ட மகளின் 15 வயதுடைய காதலன், அவரை கத்தியால் தாக்கியுள்ளான். இதில் கழுத்து வெட்டப்பட்டு தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
சம்பவ இடத்தில் இருந்து முதலில் தப்பி ஓடிய சிறுவன், பின்னர் நேற்று இரவு ஜொந்தாமினரிடம் சரணடைந்துள்ளார்.