பிரான்சின் வான்பரப்பை முற்றுகையிட்டுள்ள சஹாரா மண் துகள்!

6 சித்திரை 2024 சனி 17:04 | பார்வைகள் : 9310
பிரான்சின் வடக்கு பகுதியினை சஹாரா மணற்புயல் முற்றுகையிட்டுள்ளது. வானமெங்கும் வளிமண்டலத்தில் மணல் துகள்கல் கலந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது பரிசின் வடக்குப் பகுதியிலும், இல்-து-பிரான்சின் வடக்கு பகுதியிலும், அதேபோல் நாட்டின் வடக்கு பகுதியிலும் இந்த மணற்துகள் காற்றில் பரவியுள்ளது. சஹாரா பாலைவனத்தில் இருந்து புழுதியோடு கலந்து வரும் இந்த மணற்புயலினால் கண் எரிவு, சுவாசப்பிரச்சனை போன்றவை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எளிதில் நோயுறும் நபர்கள், நீண்டகால சுவாச மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் இன்று ஏப்ரல் 6 மற்றும் நாளை ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமையும் அவதானமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025