Paristamil Navigation Paristamil advert login

பணப்பற்றாக்குறையுடன் வாழும் மக்கள்! - மாதம் ஒன்றுக்கு €897 யூரோக்கள் தேவை!

பணப்பற்றாக்குறையுடன் வாழும் மக்கள்! - மாதம் ஒன்றுக்கு €897 யூரோக்கள் தேவை!

7 சித்திரை 2024 ஞாயிறு 06:21 | பார்வைகள் : 5393


பிரான்சில் குடும்பம் ஒன்று வாழ்வதற்கு பணப்பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கிறது. சராசரி வாழ்க்கை வாழ்பவர்கள் ஒவ்வொரு மாதமும் பணப்பற்றாக்குறையுடனே வாழ்கிறார்கள். அவர்களுக்கு மாதம் €897 யூரோக்கள் மேலதிகமாக தேவைப்படுகிறதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

முன்னதாகவே பல ஆய்வுகள் இதுபோன்ற முடிவுகளை வெளியிட்டிருந்தது. பிரான்சில் 39% சதவீதமானவர்கள் மட்டுமே தங்களது சம்பளம் போதுமானதாக இதுப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், l'Observatoire Société et Consommation நிறுவனம் அண்மையில் மேற்கொண்டிருந்த ஆய்வில், பிரான்சில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக €897 யூரோக்கள் மாதம் ஒன்றுகுக்கு மேலதிகமாக தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது. 

68% சதவீதமானவர்கள் தங்களது சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்