Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணி அபார வெற்றி.... ஹர்திக் பாண்டியா சூளுரை

இந்திய அணி அபார வெற்றி.... ஹர்திக் பாண்டியா சூளுரை

13 ஆவணி 2023 ஞாயிறு 09:49 | பார்வைகள் : 1886


கிரிக்கெட்டில் எதிரணியை மதிக்க வேண்டும் என மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வென்ற பின்னர், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த 4வது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.

தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் (84), கில் (77) மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தனர்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய ஹர்திக் பாண்டியா, தமது அணி வீரர்களை வெகுவாக பாராட்டினார்.

அவர் கூறுகையில், 'ஜெய்ஸ்வால் மற்றும் கில் புத்திசாலித்தனமாக இருந்தனர்.

அவர்களின் திறமையில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பந்துவீச்சாளர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள் என்று நான் எப்போதும் நம்புவேன்.

தொடரின் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் அணியினர் தங்கள் வேகத்தை காட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, 'டி20 கிரிக்கெட்டில் யாரும் favourite இல்லை.

நீங்கள் திரும்பி வந்து நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். எதிரணியை மதிக்க வேண்டும்.

அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடியதால் 2-0 என முன்னிலை வகித்தனர். நாளை (இன்று) வந்து நாங்கள் இன்று (நேற்று) செய்ததை சரியாக செய்வோம்' என தெரிவித்துள்ளார்.

இதேபோல், டெஸ்டில் இருந்து டி20 எனும் வடிவத்திற்கு மாறினாலும் தனது திறமையை முழுமையாக நம்புவதாக இளம்வீரர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்