சீனாவில் விசித்திரமான காதல் நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்
7 சித்திரை 2024 ஞாயிறு 09:21 | பார்வைகள் : 1188
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 20 வயதான மாணவர் லியு. இவர் பல்கலைக்கழகத்தில் மிகவும் அழகான மனிதர் என்று தன்னை கருதி உள்ளார்.
மேலும் அங்குள்ள பெண்கள் அனைவரும் தன்னை விரும்புவதாக கருதி உள்ளார். இந்த விசித்திரமான காதல் நோய் அறிகுறி முற்றி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு மாணவியிடம் காதல் வார்த்தைகளை பேசிய போது அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த பெண் தன்னை காதலிக்க வெட்கப்படுவதாக நினைத்து லியு தனது மனதை சாந்தப்படுத்தி உள்ளார்.பின்னர் தான் அவருக்கு விசித்திர நோயின் அறிகுறி இருப்பது அறிந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தன்னை விரும்புவதாக லியு நினைப்பதை கண்டுபிடித்தனர்.
அவரது இந்த விசித்திர நோய் பாதிப்பு காரணமாக இரவு முழுவதும் விழித்திருப்பது, வகுப்பில் கவனம் சிதறுவது,பணத்தை வீண் விரையம் செய்வது உள்ளிட்ட பிரச்சனைகளை அவர் சந்தித்து வருவதும் கண்டறியப்பட்டது
இதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.