Paristamil Navigation Paristamil advert login

நிலவை ஆராய்வதற்காக விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பிய ரஷ்யா

நிலவை ஆராய்வதற்காக விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பிய ரஷ்யா

13 ஆவணி 2023 ஞாயிறு 10:19 | பார்வைகள் : 3395


விண்வெளி ஆராய்ச்சியின் முன்னனியில் உள்ள நாடான ரஷ்யா, நிலவை ஆராய்வதற்காக "லூனா-25" என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா-24 என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது.

இந்தநிலையில், லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு விண்கலத்தை வெள்ளிக்கிழமை (11) ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ரொக்கெட் மூலம் அனுப்பியுள்ளது.

5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை லூனா-25 விண்கலம் அடையும் என்றும் பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெறும்போது நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் முதல் விண்கலமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவு செய்துள்ளனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்