சூரிய கிரகணம் ஸ்மார்ட் போன்களை பாதிக்குமா...? - நாசா எச்சரிக்கை
8 சித்திரை 2024 திங்கள் 09:32 | பார்வைகள் : 7626
2024ஆம் ஆண்டின் முதல் முழுமையான சூரிய கிரகணம் என்னும் அரிய நிகழ்வு நடைபெறும் நிலையில், நாசா அது தொடர்பில் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மக்கள் கைகளில் மொபைல் போன்கள் வந்தாலும் வந்தது, கண்ணில் பார்ப்பதை எல்லாம் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது இன்றைய காலகட்டத்தில் வழக்கமான ஒரு விடயமாகிவிட்டது.
ஆக, முழு சூரிய கிரகணம் நிகழும் நிலையில், அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க பலரும் முனையக்கூடும்.
ஆகவே, அது தொடர்பில் நாசா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சமூக ஊடகமான எக்ஸில், சூரிய கிரகணம் ஸ்மார்ட் போன்களை பாதிக்குமா என நாசாவிடம் கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நாசா, சூரியனுக்கு நேராக உங்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்க முயலும்போது மொபைல் போனின் சென்ஸார் சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, உங்கள் மொபைல் போனுடன் magnifying lens எதையாவது பொருத்தி புகைப்படம் எடுக்க முயன்றால் நிச்சயம் மொபைல் போன் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது நாசா.

























Bons Plans
Annuaire
Scan