Paristamil Navigation Paristamil advert login

மிரள வைக்கும் ‘புஷ்பா 2’ டீசர்.!

மிரள வைக்கும் ‘புஷ்பா 2’ டீசர்.!

8 சித்திரை 2024 திங்கள் 10:55 | பார்வைகள் : 2190


பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்று அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு இந்த டீசர் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நிமிடம் மட்டுமே உள்ள இந்த டீசரில் சேலை மற்றும் ஜாக்கெட் அணிந்த அல்லு அர்ஜுன் ஸ்டைலிஷ் ஆக வாக் செய்து வருவது மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகளில் ஈடுபடுவதுமான காட்சிகள் உள்ளது. ’புஷ்பா தி ரூல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படமும் முதல் பாகம் போகவே அதிரடி ஆக்சன் மற்றும் திரில்லிங் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விருந்தாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.