■ காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு! - இருவர் மருத்துவமனையில்...

10 வைகாசி 2024 வெள்ளி 06:00 | பார்வைகள் : 6792
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இரு காவல்துறையினர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மே 9, நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணி அளவில் இச்சம்பவம் 13 ஆம் வட்டார காவல்நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. வன்முறைச் சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் குறித்த நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த ஆயுதம் ஒன்றை பறித்தெடுத்த அவர், காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
● தாக்குதலை மேற்கொண்டவரும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக அறிய முடிகிறது.