பிரேசிலில் தொடர்ந்து பெய்யும் கன மழை - வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்
10 வைகாசி 2024 வெள்ளி 07:07 | பார்வைகள் : 2506
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர் கடும்மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 1 லட்சம் வீடுகள் சேதமடைந்து உள்ளன.
இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 100 இற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுமார் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
எனவே அவர்கள் தங்குவதற்காக பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் மீட்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.