Paristamil Navigation Paristamil advert login

உலகிலேயே முதல் முறையாக... Gene Therapy மூலம் கேட்கும் திறன் பெற்ற குழந்தை

உலகிலேயே முதல் முறையாக... Gene Therapy மூலம் கேட்கும் திறன் பெற்ற குழந்தை

10 வைகாசி 2024 வெள்ளி 08:45 | பார்வைகள் : 1992


பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாமல் பிறந்த ஒரு பிரித்தானியக் குழந்தை, உலகிலேயே முதன்முறையாக Gene therapy மூலம் செவித்திறனை மீண்டும் பெற்றுள்ளதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

பிரித்தானியாவின் Oxfordshireஐச் சேர்ந்த Jo மற்றும் James Sandy (33) தம்பதியரின் மகளான Opal Sandy என்னும் குழந்தை, auditory neuropathy என்னும் பிரச்சினை காரணமாக பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாமல் பிறந்தாள்.

இந்நிலையில், கேம்பிரிட்ஜிலுள்ள Addenbrooke's மருத்துவமனையில், பேராசிரியர் Manohar Bance என்பவர் தலைமையில், சோதனை முறையில், Opalக்கு Gene therapy என்னும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை, எதிர்பார்த்ததைவிட நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக தற்போது தெரிவிக்கிறார் அவர்.

இந்த சிகிச்சையில், கேட்கும் பிறன் பாதிப்புக்குக் காரணமான DNA, ஆபத்தை ஏற்படுத்தாத வைரஸ் ஒன்றின் உதவியுடன் சரிசெய்யப்படுகிறது.

இந்த அரிய சோதனை முறை சிகிச்சைக்குப் பின், Opal கேட்கும் திறனை பெற்றுள்ளாள். ஆறு மாதங்களுக்குப் பிறகு மெதுவாகப் பேசுவதைக் கூட தெளிவாகக் கேட்கும் திறனைப் பெற்றுவிட்ட அவள், அம்மா, அப்பா என அழைப்பதைக் கேட்டு சொல்லமுடியாத மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் Jo மற்றும் James தம்பதியர்.

விடயம் என்னவென்றால், குழந்தை Opalக்கு செய்யப்பட்டுள்ள இந்த சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதால், அவளைப்போலவே பாதிப்புக்குள்ளாகி செவித்திறன் இன்றி பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த சிகிச்சை பெரும் வரப்பிரசாதமாக அமையப்போகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்