Paristamil Navigation Paristamil advert login

மானிட சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமைகின்ற மைக்றோபிளாஸ்ரிக் - கட்டுப்பாடு நடப்புத் தேவையாகும்

மானிட சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமைகின்ற மைக்றோபிளாஸ்ரிக் - கட்டுப்பாடு நடப்புத் தேவையாகும்

10 வைகாசி 2024 வெள்ளி 09:05 | பார்வைகள் : 1370


மானிடனின் புலமைசார் அபிவிருத்தியின்  பெறுபேறாக விஞ்ஞானரீதியான தொழில்நுட்ப முடிவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் அபிவிருத்தியென இனங்காணப்படுகின்ற மாற்றத்திற்கு ஒட்டுமொத்த மானிட சமூகமும்  நிகழ்காலத்தில் இந்த மாற்றத்தின் சாதகமான மற்றும் பாதகமான பெறுபேறுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதோடு பாதகமான தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்காக துரிதமானதும் பயனுறுதிமிக்கதுமான தீர்வுகளைக் காண்பது உலகளாவிய சவாலாக மாறியுள்ளமையையும் இனங்காண முடியும்.

தொழில்நுட்பத்தின் பலம் காரணமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதும் போட்டித்தன்மையும் சிக்கலும் நிறைந்த சமூகத்தில் மனிதன் மிகவும் நெகிழ்ச்சியானதும்  வசதியானதுமான நுகர்வுப் பாங்குகளுடன் மாறிவருகிறான்.  மேற்சொன்ன நுகர்வுப் பாங்குகள் மற்றும்  வாழ்க்கை நடத்தைநெறிகள் மீது மாத்திரமன்றி  தனது மானிட வாழ்க்கை வழியுரிமை மீதும் ஏற்படுத்தியுள்ள  தாக்கம் மிகவும் தீர்மானகரமானதும் சவால்நிறைந்ததாகவும் அமைகின்றது.  

இந்த நுகர்வுப் பாங்கின் பக்கவிளைவாகவே மைக்றோபிளாஸ்ரிக் பிரதான மாசுபாட்டுக்காரணியாக சுற்றாடலில் சேர்கின்றது எனக்கூறுவதும்  பெரும்பாலும் பொருத்தமானதாகும். 

ஏனெனில் பிளாஸ்ரிக் உற்பத்திகளில் நிலவுகின்ற எடைகுறைந்ததன்மை மற்றும் வசதியாக அங்குமிங்கும் கொண்டுசெல்ல இயலுகின்றமை, விலை குறைவானதாக உள்ளமை, பல்வேறு நிறங்களையும் கவர்ச்சிகரமான தன்மையையும் கொண்டுள்ளமை, நீண்டகாலமாக நிலைத்திருத்தல் மற்றும் பாவனையின் பின்னர் கையுதிர்ப்பதிலான வசதி ஆகிய பலவிதமான பண்புகள் காரணமாக மக்கட் சமூகத்தில் பிரபல்யமான நுகர்வுப் பண்டமாக பிளாஸ்ரிக்  மாறியுள்ளது. 

இவ்விதமாக பாவிக்கின்ற பிளாஸ்ரிக் உற்பத்திகள் பாவனையின்பின்னர் முறைசாராதவகையில் கழிவுப்பொருட்களாக கையுதிர்க்கப்படுவதும் அத்துடன் பிளாஸ்ரிக்கின் உள்ளடக்கம் காரணமாக பாவனையின்போதே உடலில் சேர்வதாலும் அதன் பெறுபேறாக மானிட சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் நீண்டகால மற்றும் குறுங்காலரீதியான பாதகமான தாக்கங்கள் தோன்றியுள்ளன.

குறிப்பாக நவீனகாலத்தில் ஒருசில உற்பத்திகளின்போதும்  மைக்றோபிளாஸ்ரிக் மூலப்பொருளாக பாவிக்கப்பட்டு வருவதோடு  அது தொடர்பில் கட்டாயமாக கவனம் செலுத்தப்படவேண்டும்.    ஏனெனில் இதனூடாக மானிட சுகாதாரமும் சுற்றாடலும் அச்சுறுத்தலுக்கு இலக்காவதால்   நிலைபெறுதகு எதிர்காலத்திற்கு அது பாரிய சவாலாக அமைந்துள்ளமையாகும்.

மைக்றோபிளாஸ்ரிக்கை இனங்காண்போம்.  

பருமனில் 5 மில்லிமீற்றரைவிடக் குறைவானதும்   பல்லுருத்தோற்றம் கொண்டதுமான பிளாஸ்ரிக் பாகங்கள் மைக்றோபிளாஸ்ரிக்காக இனங்காணப்பட முடியும்.  அவை உக்கிப்போகின்ற  துரிதநிலை  குறைந்த மட்டத்தில் நிலவுவதால் மானிட உடலுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி சுற்றாடலில் பாரியஅளவில் எஞ்சிநிற்கின்றது. மைக்றோபிளாஸ்ரிக் அவற்றின் தோற்றுவாய் மற்றும் துணிக்கைகளின் அளவுக்கிணங்க  முதனிலை மற்றும் இரண்டாம்நிலை என வகைப்படுத்தப்பட முடியும்.   சலவைக் காரணிகள் மற்றும் அழகுசாதன தயாரிப்புகள் போன்ற பாவனையாளர் பாதுகாப்பு உற்பத்திகள் அல்லது கைத்தொழில் உற்பத்திகளாக தயாரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் பாகங்கள் முதனிலை மைக்றோபிளாஸ்ரிக் என அழைக்கப்படுவதோடு மைக்றோ முத்துக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.  அத்துடன் சுற்றாடலுக்கு திறந்தநிலைக்கு ஆளாகிய பின்னர் அழிவடைகின்ற பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்களும் நாரிழைகள் அல்லது பிளாஸ்ரிக் பண்டங்கள் போன்ற பிளாஸ்ரிக் அடங்கிய தயாரிப்புகள் இரண்டாம்நிலை மைக்றோபிளாஸ்ரிக் ஆகும். 

குறைந்த அல்லது கூடிய அடர்த்திகொண்ட பொலிஎத்திலீன் (PE), பொலிப்றொபிலீன் (PP), பொலியஸ்டரீன் (PS), பொலிப்றொபிலீன் டிறெப்தலேற் (PET), பொலிவயினயில் குளோறைட்  (PVC)  மற்றும் பொலிவயினயில் அல்கஹோல்  ஆகிய பல்லுருத்தோற்றங்களை உள்ளடக்கிய மைக்றோபிளாஸ்ரிக், துண்டுகள், படலங்கள், நார், நுரைகள், முத்துக்கள், கோளங்கள் / கட்டிகளாகவும் நிலவுகின்றன. 

மைக்றோபிளாஸ்ரிக்கின் நவீன சவால்  

மைக்றோபிளாஸ்ரிக்  எந்தளவில் சுற்றாடலில் சேர்ந்துள்ளதென்பதும் அது எதிர்காலத்தில் பிரமாண்டமான   சுற்றாடல்  பேரழிவினை உருவாக்க  காரணமாக அமையுமென்பதும் பல்வேறு உலகளாவிய ஆராய்ச்சிகள் மூலமாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  குறிப்பாக பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்கள் காரணமாக கடல்சார் சூழற்றொகுதி  மாசுபாட்டுக்கு இலக்காவது  நிகழ்காலத்தில் மிகவும் பாரதூரமான சுற்றாடல் சிக்கலாக மாறியுள்ளது. புவிமேற்பரப்பின் ஒட்டுமொத்த ஒட்சிசன் தேவையின் 80%  கடல்சார் சூழல் மூலமாகவே  நிவர்த்திசெய்யப்பட்டு வருவதோடு  அது உயிருள்ள , உயிரற்ற விலங்கினத்தின் வழியுரிமைமீது பிரமாண்டமான அச்சுறுத்தலை விடுக்கின்றது.  

இன்றளவில் பல்வேறு ஆய்வுகள் மூலமாக  வெளிப்படுத்தப்பட்டுள்ளதன்படி  பிளாஸ்ரிக் உக்கிப்போக சராசரியாக ஏறக்குறைய  500 - 1,000 ஆண்டுகள் கழிகின்றதென்பதும் அவை முழுமையாக உக்கிப்போகாமல் மைக்றோபிளாஸ்ரிக்காக  மாறுகின்றதென்பதுமாகும்.  அதற்கிணங்க இன்றளவில் வளிமண்டலத்தில் ஏறக்குறைய 50 - 75 ரில்லியன் தொன் பிளாஸ்ரிக் துணிக்கைகளும் மைக்றோபிளாஸ்ரிக்குகளும் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த ஆராய்ச்சிகள் மூலமாக 2025 அளவில் அது  250 மில்லியன் தொன்களை விஞ்சக்கூடுமெனவும் அத்துடன் 2050 ஆம் ஆண்டளவில் கடலில் வசிக்கின்ற மீன்களின் நிறையைவிட பிளாஸ்ரிக்கின் அளவு அதிகரித்துவிடுமெனவும்  மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த பத்து வருடங்களுக்குள் கடந்த நூற்றாண்டினைவிட பிளாஸ்ரிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதன் மூலமாக பிளாஸ்ரிக் நுகர்வு உயர்வடைந்துள்ளமையும்,  மறுபுறத்தில் 8 - 10 மில்லியன் மெட்றிக் தொன் வரையான அளவு இவ்விதமாக பாவனைக்குப் பின்னர் சுற்றாடலில் சேர்ந்துள்ளதென்பதும் வெளிப்படுகின்றது.

மைக்றோபிளாஸ்ரிக் பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகும்

அன்றாட வாழ்க்கையில்  பல்வேறு பாவனைகள் ஊடாக  நேரடியாகவோ மறைமுகமாகவோ மைக்றோபிளாஸ்ரிக் துணிக்கைகள் உடலில் சேர்ந்து அபாயநேர்வு நிலைமைக்கு  மாற்றுகின்றது   வாய் மூலமாக, சுவாசம் மூலமாக மற்றும் சருமத்தின் ஊடாக இவ்விதமாக  மைக்றோபிளாஸ்ரிக் உடலில் கலப்பதால் சமிபாட்டுத்தொகுதி, சுவாசத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி, அகச்சுரப்பித்  தொகுதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நீண்டகால மற்றும் குறுங்கால நோய் நிலைமைகள் உருவாகும்.

இரண்டாம்நிலை மைக்றோபிளாஸ்ரிக் பிளாஸ்ரிக் துணிக்கைக சுவாசம் வழியாக அவை உடலில் சேர்வதை தடுக்கமுடியாதுள்ளது.  அதனூடாக சுவாசக்கோளாறுகள், இதயநாளங்கள் சார்ந்த நோய்கள், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள், நுரையீரல்சார்ந்த தொற்றுகள் காரணமான இருமல், தும்மல்,  குருதியில் ஒட்சிசன் செறிவு மாற்றமடைவதால் சுவாசிப்பதிலான சிரமங்கள்,  களைப்பு, தலைச்சுற்று போன்ற குறுங்கால நோய் நிலைமைகளும் தோன்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

சூழற்றொகுதி தரங்குன்றுதல் 

பறவைகள், மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள்  மைக்றோபிளாஸ்ரிக் துணிக்கைகளை உணவாக உட்கொள்வதால் உணவுப் பாதையில் காயங்கள் ஏற்படுதல், உணவுப் பாதைக்குள் சிக்குதல் போன்ற உள்ளக மற்றும் வெளிப்புற அபாயநேர்வுமிக்க நிலைமைகள் ஏற்படுகின்றன. 

மைக்றோபிளாஸ்ரிக் கட்டுப்பாட்டுக்கான உலகளாவிய அணுகுமுறைகள் 

உலகளாவிய நெருக்கடியொன்றாக மாறியுள்ள  பிளாஸ்ரிக் உற்பத்தி, விநியோகம் மற்றும்  பாவனையை கட்டுப்படுத்துவதற்காகவும்  மட்டுப்படுத்துவதற்காகவும் மறுபுறத்தில் பாவனையின் பின்னர் கையுதிர்ப்பதன் மூலமாக பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப்பொருள் சிக்கலைத் தீர்ப்பதற்காகவும் அரச மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் / வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளின் உற்பத்திப் பொருளாதார செயற்பாங்கில் மேற்சொன்ன தாக்கம் உயர்மட்டத்தில் நிலவுகையில் இந்நாடுகளால் பல்வேறு கட்டுப்பாடுசார்ந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. 

சவால்களை எதிர்கொள்ளல் : இலங்கை நடைமுறைகள்

பொலித்தீன்  மற்றும் தனிப்பாவனை பிளாஸ்ரிக் உற்பத்தி, விநியோகம், சந்தைப்படுத்தல் போன்ற செயற்பாடுகளின் கட்டுப்பாட்டுக்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு   எதிர்காலத்திலும் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. 

அதன்கீழ் பொலித்தீன் உணவுப் பொதியிடல்பொருள் (லன்ச் ஷீட்)  உற்பத்தி, பாவனை மற்றும் வர்த்தகம். அதிக பருமன்கொண்ட பொலிஎத்திலின்  (HDPE),ஷொபிங் பேக், குரொசரி பேக், பிளாஸ்ரிக் பொருட்கள்  மற்றும் எச்சங்களை திறந்தவெளியில் தகனம்செய்தலும் விரிவடைந்த  பொலியஸ்டரின் உணவுப் பெட்டிகள் உற்பத்தி, வர்த்தகம், பாவனையைத் தடைசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மேலும்  PET, PVC தேறிய பரிமாணம் 20 மில்லிமீற்றர் / தேறிய நிறை 20 கிறாமிற்கு இணையான அல்லது அதற்குக் குறைவான செஷே பக்கெற்றுகள்  ( உணவு மற்றும் ஔடத பொதியிடலுக்காக பாவித்தல் தவிர்ந்த) காற்று நிரப்பக்கூடிய விளையாட்டுச் சாமான்கள் (பலூன், பந்துகள், நீரில் மிதக்கக்கூடிய / நீச்சல் தடாகங்களில் பாவிக்கின்ற விளையாட்டுச் சாமான்களும் நீர் விளையாட்டுச் சாதனங்கள் தவிர்ந்த) அத்துடன்  பிளாஸ்ரிக் காம்புகள்  (STEM) கொண்ட கொட்டன் பட்ஸ் ( COTTON BUDS) ( மருத்துவ/ கிளினிக்சார்ந்த சிகிச்சைகளுக்காக பாவிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கொட்டன் பட்ஸ் தவிர்ந்த) மற்றும்  தனிப்பாவனை பானக் குழாய்கள் மற்றும் கலத்தல் சாதனங்கள்  / விமானப் பயணங்கள் தவிர்ந்ததாக பாவிக்கப்படுகின்ற உணவுப்பொதியிடல் பீங்கான், கோப்பைகள்,  கரண்டிகள், முள்ளுக் கரண்டிகள் மற்றும் கத்திகள் / மலர் மாலைகள்/ இடியப்பத் தட்டுகள் பாவிக்கப்படுவது  தடைசெய்யவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.  

அதன்படி,  மைக்றோபிளாஸ்ரிக்  சம்பந்தமாகவும் அதன் அபாயநேர்வு நிலைமையை இனங்கண்டு அதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு நாடு என்றவகையில் நிறுவனமென்றவகையில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட மற்றும்  கட்டுப்பாட்டு  முறையியல்கள் போன்றே  பல்வேறு ஊடகப் பாவனைகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற கல்வி, தொடர்பாடல் முறையியல்களும் மக்கள் மனங்களை விழித்தெழச் செய்வித்து நிலைபெறுதகு வாழ்க்கைப்பாங்கு மற்றும் நிலைபெறுதகு எதிர்காலத்திற்காக வழிகாட்டுகின்ற பயனுறுதிமிக்க அரும்பணியாகுமென எடுத்துக்காட்ட இயலும். 

சுஜீவா பெரேரா
சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர்
சுற்றாடல் மேம்பாட்டுக் கூறு
மத்திய சுற்றாடல் அதிகாரசபை

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்