அடக்கம்

10 வைகாசி 2024 வெள்ளி 09:26 | பார்வைகள் : 5967
சரியானதை சரியான நேரத்தில்
சரியாக செய்யாவிடின் அது குற்றம்
சரியானதை சரியான நேரத்தில்
சரியாக செய்துவிடின் அது வெற்றி
தவறானதை தவறான நேரத்தில்
தவறாக செய்தால் அது மடமை
தவறானதை தவறான நேரத்தில்
சரியாக செய்தால் அது திமிர்தனம்
தெரியாததை தெரியும் கூட்டத்தில்
தெரிந்தபடி கூறுதல் அது அகங்காரம்
தெரிந்ததை தெரியாத கூட்டத்தில்
தெரியாததைப்போல் பேசுதல் அது அடக்கம்