எங்கள் விரல் நகங்களை கொண்டு போர் தொடுப்போம்- இஸ்ரேல் பிரதமர்
10 வைகாசி 2024 வெள்ளி 11:00 | பார்வைகள் : 3367
இஸ்ரேல் தன்னிடம் உள்ள அனைத்துவளங்களையும் பயன்படுத்தி தனியாக போரிடும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்
இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தினை இடைநிறுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதில் அளித்துள்ள பெஞ்சமின் நெட்டயன்யாகு இதனை தெரிவித்துள்ளார்
தனித்து நிற்கவேண்டிய நிலையேற்பட்டால் நாங்கள் தனித்து நிற்போம் தேவைப்பட்டால் எங்கள் விரல்நகங்களையும் பயன்படுத்தி போரிடும்வோம் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் தனது 76 வது சுதந்திரதினத்தை நெருங்குகின்றது என தெரிவித்துள்ள அவர் 1948ம் ஆண்டு யுத்தத்தின்போது எங்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கு எதிராக ஆயுததடை விதிக்கப்பட்டிருந்தது எங்களிடையே உள்ள வலிமை வீரம் ஒற்றுமையுடன் நாங்கள் வெற்றிபெற்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் அனேகவிடயங்களில் நாங்கள் பொதுவான கருத்தை கொண்டிருந்தோம் சில விடயங்கள் குறித்து கருத்து முரண்பாடு காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் கருத்துவேறுபாடுகளிற்கு தீர்வை காணமுடிந்தது என தெரிவித்துள்ளார்.