Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை - ஐ நா வில் தீர்மானம் 

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை - ஐ நா வில் தீர்மானம் 

12 வைகாசி 2024 ஞாயிறு 04:43 | பார்வைகள் : 3273


ஐக்கியநாடுகள் சபையில்  பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை  வழங்குவது குறித்து  ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது.

143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

2012 முதல் பாலஸ்தீனத்திற்கு ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து  பாதுகாப்பு சபை மாத்திரமே தீர்மானிக்க முடியும்.

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா சமீபத்தில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது.

எனினும் நேற்றைய தீர்மானம் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை வழங்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்த தீர்மானத்தை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் வரவேற்றுள்ளார்.

ஐக்கியநாடுகள் பயங்கரவாத நாட்டை தனது பக்கத்திற்கு வரவேற்றுள்ளது என ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்