Paristamil Navigation Paristamil advert login

சிறையில் இருந்து தப்பிய 10 கைதிகள் - திகைக்கும் சிறைத்துறை!!

சிறையில் இருந்து தப்பிய 10 கைதிகள் - திகைக்கும் சிறைத்துறை!!

12 வைகாசி 2024 ஞாயிறு 07:12 | பார்வைகள் : 14783


Sète நகரிலுள்ள தீர்ப்பிற்காகத் தடுத்து வைக்கப்படும் சிறையான நிர்வாகத் தடுப்பு மையமானCRA (centre de rétention administratif) இல் இருந்து 10 கைதிகள் தப்பியோடி உள்ளனர்.

சிறைத்துறையின் காவலர்கள் பற்றாக்குறையும், அங்கிருந்த கண்காணிப்பு கமராக்கள் இயங்காமையுமே, இந்தக் கைதிகள் தப்புவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என, சிறையதிகாரிகளின் தொழிற்சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

கைதிகள் 10 பேரும் ஒரு அறைக்குள் கூடி, கதவின் பிணைச்சலைக் கழற்றி, அதன் மூலம் மேற்கூறையை வெட்டி, கூரையில் ஏறித் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது எனவும், உள்துறை அமைச்சரின் அக்கறையின்மையே இதற்குக் காரணம் எனவும், தொழிற்சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்