சூரிய ஒளியை வெல்லும் IPhone 16 Pro...?
13 வைகாசி 2024 திங்கள் 08:01 | பார்வைகள் : 5927
ஆப்பிள் iPhone 16 லைன்அப் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சமீபத்திய லீக் தகவல்கள் iPhone 16 Pro மாடலில் குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்கள் இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டுகின்றன. இந்த புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
நம்பகமான தகவல்களின்படி, iPhone 16 Pro மற்றும் Pro மாக்ஸ் மாடல்களில் 20% அதிக பிரகாசமான டிஸ்ப்ளே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம், வெளிச்சம் அதிகமாக இருக்கும் சூழல்களிலும் கூட போனை எளிதாகப் பயன்படுத்த முடியும். இது வெளிப்புறங்களில் தங்கள் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
புதிய டிஸ்ப்ளேவை தவிர, iPhone 16 Pro பற்றிய பல வதந்திகள் பரவி வருகின்றன. இதில் சில:
மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காக அடுத்த தலைமுறை processor
மேம்படுத்தப்பட்ட கேமரா லென்ஸ்கள்
சிறந்த வெப்ப மேலாண்மைக்கான புதிய வெப்ப முறைமை (thermal system)
நீண்ட பற்றரி ஆயுள்
மேம்படுத்தப்பட்ட மைக்ரோஃபோன் (better microphone)
வீடியோ பதிவு செய்வதற்கான கூடுதல் வசதிகள்
இதுவரை வெளியான தகவல்கள் யூகங்களே என்பதையும், இறுதி வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் மாற்றப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். என்றாலும், இந்த அப்டேட்கள் உண்மையாக இருந்தால், ஐபோன் 16 ப்ரோ இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போனாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan