நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
21 ஆவணி 2023 திங்கள் 07:15 | பார்வைகள் : 12927
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம் இடம்பெற்றது.
தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் 14ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , அன்றைய தினம் மாலை கொடியிறக்க திருவிழா இடம்பெறும்.
கொடியேற்ற திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு அங்கப்பிரதட்சணம் உட்பட பல்வேறு நேர்த்திகளில் ஈடுபட்டனர்.


























Bons Plans
Annuaire
Scan