Paristamil Navigation Paristamil advert login

கேக்கிற்கு பதிலாக கஞ்சா! - அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்..!

கேக்கிற்கு பதிலாக கஞ்சா! - அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்..!

13 வைகாசி 2024 திங்கள் 16:47 | பார்வைகள் : 17467


தனது பிள்ளைகளுக்காக கேக் பெட்டி ஒன்றை வாங்கிய நபர் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. கேக்கிற்கு பதிலாக பெட்டிக்குள் கஞ்சா களி இருந்துள்ளது.

இச்சம்பவம் மே 7 ஆம் திகதி,  Libourne (Gironde) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் நபர் ஒருவரே அருகில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத அங்காடி ஒன்றில் 200 கிராம் எடையுள்ள சொக்கிலேட் கேக் பெட்டி ஒன்றை வாங்கியுள்ளார்.

அன்றைய தினம் இடம்பெற்ற PSG எதிர் Borussia Dortmund அணிகளுக்கு இடையிலான சாம்பியன் லீக் போட்டியினை வீட்டில் இருந்து பார்வையிட்டபோது, குறித்த கேக் பெட்டியினை உடைத்து பிள்ளைகளுக்கு கொடுக்க முற்பட்டார். 

அதன்போது பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. குறித்த பெட்டிக்குள் கேக்கிற்கு பதிலாக 200 கிராம் எடையுள்ள கஞ்சா களி இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல்துறையினரை அழைத்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்