■ பரிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட 'FR-Alert' எச்சரிக்கை!!
14 வைகாசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 4772
நேற்று மே 13 ஆம் திகதி இரவு, பரிசில் வசிக்கும் பல ஆயிரம் மக்களுக்கு 'FR-Alert' வசதி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அண்மையில் பரிசோதிக்கப்பட்ட FR-Alert முறையை, நேற்றைய தினம் காவல்துறையினர் பயன்படுத்தியிருந்தனர். FR-Alert என்பது அவசரகாலத்தின் போது பொதுமக்களுக்கு தொலைபேசி வழியாக அரசு விடுக்கும் எச்சரிக்கை முறையாகும். தொலைபேசியின் ஒலி நிறத்தப்பட்டிருந்தாலும், சத்தத்துடனும், அதிர்வுடனும் (Vibration) இந்த எச்சரிக்கை விடுக்கப்படும்.
நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணி அளவில் பரிசில் வசிக்கும் பலருக்கு இதன் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதில், 'ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலத்தில் வீதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதும், QR குறியீடு பெறாவிட்டால் சில பகுதிகளில் அனுமதிக்கப்படமாட்டீர்கள்' எனவும் குறிப்பிடப்பட்டு இந்த எச்சரிக்கையை உள்துறை அமைச்சகம் விடுத்திருந்தது.