€3,000 நுழைவுக் கட்டணம்??! - இசை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார் பாடகி Taylor Swift..!!

14 வைகாசி 2024 செவ்வாய் 06:59 | பார்வைகள் : 5693
பரிசில் நான்கு நாட்கள் இசை நிகழ்ச்சியினை நடாத்தி முடித்துள்ளார் அமெரிக்கப்பாடகி Taylor Swift.
"Eras Tour" என அழைக்கப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, கடந்த வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்கள் La Défense Aréna அரங்கில் இடம்பெற்றது. நாள் ஒன்றுக்கு 45,000 பேர் வீதம் மொத்தமாக 180,000 பேரினை இந்த நாட்கு நாட்களும் நிகழ்ச்சியை பார்வையிட்டிருந்தனர்.
இவர்களில் 30% சதவீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் எனவும், அவர்களில் 20% சதவீதமானவர்கள் அமெரிக்கர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்தவாரம் முழுவதும் அமெரிக்காவில் இருந்து வரும் விமானங்கள் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
நிகழ்ச்சிக்கான நுழைவுக் கட்டணம் €1,000 யூரோக்களில் இருந்து €2,000 யூரோக்கள் வரை அறவிடப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க ரசிகர்களுக்கு மட்டும் இந்த கட்டணம் $500 / $600 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இறுதி நிமிடத்தில் இருக்கை ஒன்று €3,000 யூரோக்களுக்கும் விற்பனையாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மூன்றுமணிநேர இசை நிகழ்ச்சியில், தனது புதிய அல்பம் ஒன்றில் இருந்து எட்டு பாடல்களையும், மேலும் அவருடைய பிரபலமான பல பாடல்களையும் நிகழ்ச்சி முழுவதும் பாடியிருந்தார் Taylor Swift.