Paristamil Navigation Paristamil advert login

■ அவதானம் - சமிக்ஞை ஒலி எச்சரிக்கை!

■ அவதானம் - சமிக்ஞை ஒலி எச்சரிக்கை!

14 வைகாசி 2024 செவ்வாய் 08:24 | பார்வைகள் : 9973


இன்று மே 14, பரிஸ் ஈஃபிள் கோபுரம் அருகே சமிக்ஞை ஒலி எழுப்பப்படும் எனவும், அது தொடர்பில் மக்கள் அச்சமடையத்தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிற்பகல் 1 மணியில் இருந்து 4.30 மணிக்குள்ளாக இந்த எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும், ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய இந்த சமிக்ஞை ஒலி பரிசோதிக்கப்பட உள்ளது. 

musée national de la Marine அருங்காட்சியகத்தின் கூரையில் பொருத்தப்பட்டுள்ள சைரன் சமிக்ஞையே ஒலிக்கவிடப்பட உள்ளது. 

500 மீற்றர் சுற்றுவட்டத்துக்கு இந்த ஒலி கேட்கும் எனவும், பொதுமக்கள் அச்சமடையத்தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக 'FR-Alert' எனும் தொலைபேசி வழியான எச்சரிக்கை பரிசோதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்