Paristamil Navigation Paristamil advert login

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம்

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம்

14 வைகாசி 2024 செவ்வாய் 08:47 | பார்வைகள் : 5983


மெக்சிகோ நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குவாத்தமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 

இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 6.4 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

எனினும் இந்த நில அதிர்வால் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என மெக்சிகோவின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவகம் அறிவித்துள்ளது.

அதேசமயம் அமெரிக்க ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பு மற்றும் மெக்சிகோவின் கடற்படையினர் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்