காசா மீதான போரில் செத்து மடியும் பாலஸ்தீனர்கள்
14 வைகாசி 2024 செவ்வாய் 08:54 | பார்வைகள் : 7157
காசா மீதான இஸ்ரேலின் போரால் மனமுடைந்த அமெரிக்காவின் புலனாய்வு பிரிவிலிருந்து இராஜினாமா செய்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்தில் தனது பதவியை இராஜினாமா செய்த இராணுவமேஜர் ஹரிசன் மான், இது குறித்து தனது சகாக்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,
அவரது கடிதத்தில் எனது இராஜினாமாவிற்கான காரணங்களை அச்சம் காரணமாக நான் பல மாதங்களாக தெரிவிக்கவில்லை .
தொழில்முறை விதிமுறைகளை மீறுவது நான் பெரிதும் மதிக்கும் எனது சிரேஸ்ட அதிகாரிகளிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவது நான் துரோகம் செய்துவிட்டேன் என நீங்கள் கருதுவீர்கள் என பல அச்சங்களால் இராஜினாமாவிற்கான காரணத்தை முதலில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காசா மீதான தாக்குதகளில் பாலஸ்தீனியர்கள் பாரியளவில் படுகொலை செய்வதற்கு காரணமான அமெரிக்காவின் கொள்கைகளை முன்னெடுக்க உதவுவது குறித்து வெட்கம் அடைந்தேன் என குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்து குற்றவுணர்வினால் பாதிக்கப்பட்டேன் எனவும் ஹரிசன்மான் தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan