Paristamil Navigation Paristamil advert login

 உக்ரேனிய பாடசாலைக் குழந்தைகள் பதுங்கு குழிக்குள் தள்ளப்படும் நிலை

 உக்ரேனிய பாடசாலைக் குழந்தைகள் பதுங்கு குழிக்குள் தள்ளப்படும் நிலை

14 வைகாசி 2024 செவ்வாய் 10:38 | பார்வைகள் : 2933


உக்ரைன் நகரமொன்றில் பாடசாலைக் குழந்தைகள் பதுங்கு குழிக்குள் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டில் ரஷ்யா படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தற்போது கார்கிவ் (Kharkiv) நகரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனியர்கள் மீண்டும் உயிர் பயத்தில் இருக்கும் முக்கிய நகரமாக கார்கிவ் மாறியுள்ளது.

ரஷ்யாவின் சமீபத்திய உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கும்போது, இங்கு உள்ள பாடசாலையில் குழந்தைகள் வெடிகுண்டு தடுப்புப் பதுங்கு குழிக்குள் தள்ளப்பட்டனர். 

உக்ரைனில் கிரெம்ளினில் இரண்டாவது படையெடுப்பு என்று அழைக்கப்படுவதனால், பயத்தில் இருந்த பாடசாலை குழந்தைகள் நிலத்தடி பதுங்கு குழிக்கு சென்றனர். 

காற்று புகாத மற்றும் சன்னல்கள் இல்லாத தற்காலிகப் பாடசாலைக்குள் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதால், முன்னணியில் இருந்தவர்கள் சண்டையில் இருந்து தப்பி ஓடினர்.

ரஷ்ய இராணுவம் முன்னேறியதும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நகரத்தைவிட்டு வெளியேறினர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்