Stains : வீடொன்றில் இருந்து நான்கு வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு!

14 வைகாசி 2024 செவ்வாய் 11:17 | பார்வைகள் : 12482
நான்கு வயதுடைய சிறுவன் ஒருவனது சடலத்தை 93 ஆம் மாவட்ட காவல்துறையினர் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்டனர்.
சிறுவனின் தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Stains (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று திங்கட்கிழமை இரவு காவல்துறையினர் நான்கு வயதுடைய சிறுவன் ஒருவனது சடலத்தை மீட்டனர்.
உடலில் பல காயங்கள் இருந்ததாகவும், துன்புறுத்தலுக்கு உள்ளான அடையாளங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தடயவியல் துறை அழைக்கப்பட்டு சடலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
சிறுவனின் தாய், அவனது வளர்ப்புத் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025