வரலாறு படைத்த ஸ்பெயின் அணி...
21 ஆவணி 2023 திங்கள் 10:18 | பார்வைகள் : 9664
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து விழாவின் இறுதிப் போட்டி சிட்னியின் நேற்று நடைப்பெற்றது.
இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வரலாறு படைத்தது.
ஸ்பெயின் அணிக்காக அந்த ஒற்றை கோலை பதிவு செய்தவர் ஓல்கா கார்மோனா என்ற வீராங்கனை.
இவரது தந்தையே நேற்று மரணமடைந்துள்ளார்.
இறுதிப்போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட கடைசி நிமிடத்தில் குறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் கால்பந்து அமைப்பு வெளியிட்ட இரங்கல் செய்தியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் அன்பையும் ஆதரவையும் அரவணைபையும் ஓல்கா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பகிர்ந்து கொள்வதாக ஸ்பெயின் கால்பந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

























Bons Plans
Annuaire
Scan