அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
15 வைகாசி 2024 புதன் 03:07 | பார்வைகள் : 1797
கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை இலங்கையில் செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
குறித்த தடுப்பூசியால், அத்த அழுத்தம், ரத்தம் உறைதல் மற்றும் த்ரோம்போசைட்டோபீனியா (குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை, டிடிஎஸ் / விஐடிடி-இன் விளைவுகள் உயிருக்கு ஆபத்தானவை. இதில் பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் அடைப்பு மற்றும் உறுப்பு நீக்கம் ஆகியவையும் அடங்கும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டன.
இந்த விடயத்தை குறித்த ஏற்கனவே நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்த நோய் அறிகுறிகள் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், தடுப்பூசி செலுத்தியவுடனேயே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.