Paristamil Navigation Paristamil advert login

■ கிழக்கு நோக்கி விஸ்தரிக்கப்பட்டும் 11 ஆம் இலக்க மெற்றோ! - அடுத்த மாதம் சேவைக்கு..

■ கிழக்கு நோக்கி விஸ்தரிக்கப்பட்டும் 11 ஆம் இலக்க மெற்றோ! - அடுத்த மாதம் சேவைக்கு..

15 வைகாசி 2024 புதன் 07:52 | பார்வைகள் : 2305


11 ஆம் இலக்க மெற்றோ சேவை பரிசின் கிழக்குப் பகுதியில் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் புதிய நிலையங்களுக்கு மெற்றோ பயணிக்க உள்ளது.

Rosny-Bois-Perrier நகரம் வரை  மொத்தமாக ஆறு புதிய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றினை பிரதமர் Gabriel Attal வரும் ஜூன் 13 ஆம் திகதி திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Serge-Gainsbourg , 

Romainville-Carnot, 

Montreuil-Hôpital, 

La Dhuys, 

Coteaux Beauclair,

Rosny-Bois-Perrier

ஆகிய ஆறு நிலையங்களும் அன்றைய நாளில் திறந்துவைக்கப்பட்டு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன. 

இந்த விஸ்தரிப்பினால் நாள் ஒன்றுக்கு 190,000 பயணிகள் வரை பயணடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த விஸ்தரிப்புக்காக 1.3€ பில்லியன் யூரோக்கள் செலவிட்டுள்ளதாக RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்