Paristamil Navigation Paristamil advert login

ஆரம்பமானது Cannes திரைப்பட விழா!

ஆரம்பமானது Cannes திரைப்பட விழா!

15 வைகாசி 2024 புதன் 13:08 | பார்வைகள் : 3691


சர்வதேச திரைப்படங்களுக்கான விழாவாக கொண்டாடப்படும் Cannes  திரைப்பட விழா, மே 14 நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.

77 ஆவது ஆண்டாக இந்த நிகழ்வு இவ்வருடம் இடம்பெற உள்ளது. செவ்வாய்க்கிழமை முதl 25 ஆம் திகதி சனிக்கிழமை வரையான 12 நாட்கள் இந்த திரைப்பட விழா இடம்பெற உள்ளது. மொத்தமாக 19 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இறுதி நாள் நிகழ்வில் திரைப்படங்களுக்கான விருதுகள் அளிக்கப்படும். அதில் சிறந்த திரைப்படத்துக்கான Palme d'Or விருதும் அறிவிக்கப்பட உள்ளது. நடுவர்கள் குழாமில் உலகம் முழுவதும் ஓடி வசூல் சாதனை புரிந்த Barbie திரைப்படத்தின் இயக்குனர் Greta Gerwig கலந்துகொள்கிறார்.

சென்ற ஆண்டைப் போல பல்வேறு இந்திய திரைப்படங்களும் இவ்வருடம் திரையிடப்பட உள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்