Paristamil Navigation Paristamil advert login

46 ஆம் இலக்க பேருந்தை ரகசியமாக இயக்கிய ஊழியர்! - குழப்பத்தில் RATP..!!

46 ஆம் இலக்க பேருந்தை ரகசியமாக இயக்கிய ஊழியர்! - குழப்பத்தில் RATP..!!

15 வைகாசி 2024 புதன் 18:00 | பார்வைகள் : 4763


பேருந்து சாரதி ஒருவர் தனது ஓய்வினை அறிவித்ததன் பின்னர், சில வாரங்கள் கழித்து பேருந்து ஒன்றை சட்டவிரோதமாக இயக்கியுள்ளார். அவருக்கு €75,000 குற்றப்பணம் அறவிடப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

46 இலக்க பேருந்தின் சாரதியாக கடமையாற்றிய ஒருவர், கடந்த மார்ச் மாதம் பணியில் ஒருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவரால் வீட்டில் இருக்கமுடியவில்லை. இதனால் கடந்தவாரம், தனது சாரதி உடையினை அணிந்துகொண்டு Lagny பேருந்து தரிப்பிடத்தக்கு வருகை தந்த அவர், தனது அடையாள அட்டையை வீட்டில் வைத்துவிட்டு வந்ததாக தெரிவிக்க, பாதுகாவலர் அவரை உள்ளே விட்டுள்ளார். 46 ஆம் இலக்க பேருந்தை இயக்கிய அவர், காலை 8.55 மணியில் இருந்து 10.46 மணிவரை அவரது வழியில் பேருந்தைச் செலுத்தி, பயணிகளை ஏற்றி இறங்கி, மீண்டும் பேருந்தைக் கொண்டுசென்று தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இச்சம்பவத்தை சிலமணிநேரம் கழித்து அறிந்துகொண்ட RATP நிறுவனம், 20 ஆம் வட்டார காவல்நிலையயத்தில் அவர் மீது வழக்கு தொடுத்தது.

சில நாட்களின் பின்னர், குறித்த சாரதி Lilas நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தக்கு அதேபோன்று சீருடையுடன் வருகை தந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறையும், €75,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்