பரிஸ் : மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு! - ஒருவர் பலி..!
15 வைகாசி 2024 புதன் 20:18 | பார்வைகள் : 18840
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மதுபான விடுதி வாசலுக்கு ஸ்கூட்டரில் வந்த ஆயுததாரி ஒருவர், வாசலில் நின்றிருந்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். rue des Envierges வீதியில் இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (மே 15) பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது.
காவல்துறையினர் அழைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆயுததாரி தப்பிச் சென்ற நிலையில், சடலம் உடற்கூறு பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டது.
ஆயுததாரிக்கும் - கொல்லப்பட்டவருக்கும் இடையே முன்னதாகவே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அதன் முடிவிலேயே இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் அறிய முடிகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan