Paristamil Navigation Paristamil advert login

■ 100 மில்லியன் யூரோக்கள் சேதம், நால்வர் பலி, TikTok தடை, இராணுவம் குவிப்பு.. பரபரப்பாகும் Nouvelle-Calédonie.!

 ■  100 மில்லியன் யூரோக்கள் சேதம், நால்வர் பலி, TikTok தடை, இராணுவம் குவிப்பு.. பரபரப்பாகும் Nouvelle-Calédonie.!

16 வைகாசி 2024 வியாழன் 06:00 | பார்வைகள் : 5186


● பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Nouvelle-Calédonie தீவில் வன்முறை கட்டுக்கடங்காமல் இடம்பெற்று வருகிறது. பொது இங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு வருகிறது. வாகனங்கள் எரிக்கப்படுவதும், கடைகள் உடைக்கப்படுவதும் என இதுவரை நூறு மில்லியன் யூரோக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

● இன்று பரிசில் பாதுகாப்புச் சபை கூடுகிறது. Nouvelle-Calédonie தீவில் இடம்பெறும் வன்முறை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் கூடுகிறது. காலை 11 மணிக்கு இடம்பெற உள்ள இந்த சந்திப்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்கிறார்.

● Nouvelle-Calédonie இல் சமூகவலைத்தளமான TikTok தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

● 22 வயதுடைய இளம் ஜொந்தாம் வீரர் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் உடனடியாக சரணடையும் படி காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

● தலைநகர் Noumea முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விமானநிலையம், துறைமுகம் போன்ற பகுதிகள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

● இதுவரை இடம்பெற்ற வன்முறையில், 17 வயதுடைய இளைஞன், 22 வயதுடைய ஜொந்தாம் வீரர் உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்